தொப்பூரில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தர்மபுரி
நல்லம்பள்ளி:
நாகாலாந்து மாநிலத்தில் இருந்து கோவைக்கு பிஸ்கட் பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி புறப்பட்டது. இந்த லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்து கொண்டு இருந்தது. அப்போது தொப்பூர் புதூர் பகுதியில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி, சாலையின் தடுப்பு சுவரில், மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்தால் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் கன்டைய்னர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story