சோளக்காளிபாளையத்தில் விபத்து: கரூரை சேர்ந்தவர் பலி
சோளக்காளிபாளையத்தில் நடந்த விபத்தில் கரூரை சேர்ந்தவர் பலியானாா்.
கொடுமுடி
கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 55). இவர் கொடுமுடி நகப்பாளையத்தில் நடந்த உறவினர் வீட்டு வளைகாப்புக்கு உறவினர் சரவணன் என்பவருடன் ஸ்கூட்டரில் வந்தார். வளைகாப்பு முடிந்ததும் இருவரும் வாங்கல் குப்பிச்சிபாளையத்துக்கு ஸ்கூட்டரில் சென்றுகொண்டு இருந்தார்கள். வண்டியை சரவணன் ஓட்டினார். துரைசாமி பின்னால் உட்கார்ந்து வந்தார்.
சோளக்காளிபாளையம் தண்ணீர் தொட்டி அருகே சென்றபோது, கரூரை சேர்ந்த கவின் குமார் என்பவர் மோட்டார்சைக்கிளில் எதிரே வந்துகொண்டு இருந்தார். கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிளும், ஸ்கூட்டரும் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட துரைசாமி படுகாயம் அடைந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினார்கள்.
இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.