பரமத்திவேலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி மனைவி உள்பட 2 பேர் காயம்


பரமத்திவேலூர் அருகே  மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி  மனைவி உள்பட 2 பேர் காயம்
x

பரமத்திவேலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி மனைவி உள்பட 2 பேர் காயம்

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே உள்ள பெரியகரசப்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் அருண் (வயது 27). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஐஸ்வர்யா. இந்த நிலையில் அருண்- ஐஸ்வர்யா ஆகியோர் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் பரமத்திவேலூர் வந்தனர். பின்னர் அவர்கள் ஊருக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பொய்யேரி அருகே ஒழுகூர்பட்டி பிரிவு சாலையில் திரும்ப‌ முயன்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அருண் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் அருண் கீழே விழுத்து தலையில் படுகாயம் அடைந்தார். ஐஸ்வர்யா லேசான காயம் அடைந்தார். எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் தேவராஜ் (27) படுகாயம் அடைந்தார். விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தேவராஜை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கும், அருணை வேலூர் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் அருணை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story