விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 19 Oct 2023 12:45 AM IST (Updated: 19 Oct 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

உலக விபத்து காயம் தினத்தை முன்னிட்டு காரைக்குடி அப்பல்லோ ரீச் மருத்துவமனை சார்பில் காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் உடல் காயத்தால் ஏற்படும் மரணத்தை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும், அவற்றின் வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டியது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் அப்பல்லோ ரீச் மருத்துவமனை காணிப்பாளர் டாக்டர் கோகுலகிருஷ்ணன், டாக்டர் சேகர், ஹரி ராஜ்குமார், முருகேசன் மற்றும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் டெக்னீஷியன்ஸ், ஊழியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

1 More update

Next Story