தேனி பாரஸ்ட் ரோட்டில் விபத்து தடுப்பு நடவடிக்கை


தேனி பாரஸ்ட் ரோட்டில் விபத்து தடுப்பு நடவடிக்கை
x
தினத்தந்தி 19 Nov 2022 12:30 AM IST (Updated: 19 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி பாரஸ்ட் ரோட்டில் விபத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

தேனி

தேனி பாரஸ்ட்ரோடு என்பது நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இந்த சாலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் பலரும் நடந்து செல்கின்றனர். இந்த சாலையின் ஒரு பகுதியில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. சில வாகனங்கள் மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. இங்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். சில நாட்களாக இங்கு நிறுத்தப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்துமாறு போலீசார் அறிவுறுத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போலீசார் அபராதம் மற்றும் வாகனங்கள் பறிமுதல் போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதையடுத்து நேற்று அங்கு வாகனங்கள் நிறுத்தப்படவில்லை. இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக சாலையோரம் இரும்பு தடுப்புகள் வைத்து பாதை வசதியை போலீசார் ஏற்படுத்தினர். நேற்று மாலை பள்ளிகள் முடிந்து திரும்பிய மாணவ, மாணவிகள் இந்த தடுப்புகளுக்கு இடையே உள்ள பாதையில் நடந்து சென்றனர். வழக்கமாக மாலையில் ஏற்படும் நெரிசல் நேற்று குறைந்து காணப்பட்டது. இந்த முயற்சியை மேற்கொண்ட போக்குவரத்து போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story