விபத்தை ஏற்படுத்தும் சாலை தடுப்புகள்
விபத்தை ஏற்படுத்தும் சாலை தடுப்புகள்
தளி
உடுமலை- பழனி தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சாலைகள் சந்திக்கும் பகுதியில் ஆங்காங்கே டிவைடர்கள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் பஸ் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்கிறது. ஆனால் கார், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் வேகத்தை குறைக்காமல் எளிதாக கடந்து சென்று விடுகிறது. அப்போது நெடுஞ்சாலையை கடக்க முற்படுகின்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிர் இழக்கும் சம்பவம் நடக்கிறது. அந்த வகையில் உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள டிவைடர்களால் இதுவரையில் 2 உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. வாகனத்தின் வேகத்தை குறைக்காமல் அலட்சியப்போக்கோடு சென்ற வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால் விலை மதிப்பற்ற உயிர் பறிபோகி உள்ளது.
சாலை போக்குவரத்தின் போது மிதமான வேகத்தில் செல்வது வாகன ஓட்டிகளின் தலையாய கடமையாகும். எனவே உடுமலை- பழனி நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள டிவைடர்களுக்கு பதிலாக வேகத்தடை அமைக்க வேண்டும். அல்லது மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.