கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி


கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர்  பலி
x
திருப்பூர்


திருப்பூர் இடுவாய் ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் மகன் சக்திவேல் (வயது 30). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அவினாசி வழியாக கோவை-சேலம் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்த சக்திவேல் படுகாயம் அடைந்தார். உடனடியாக காரை ஓட்டிச் சென்ற பழனிசாமி மற்றும் சிலர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சக்திவேலை பரிசோதித்த டாக்டர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story