போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால் நெல்லை கோர்ட்டு வளாகத்தில் குற்றவாளி விஷம் குடித்து தற்கொலை...!


போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால் நெல்லை கோர்ட்டு வளாகத்தில் குற்றவாளி விஷம் குடித்து தற்கொலை...!
x

நெல்லை கோர்ட்டு வளாகத்தில் போக்சோ குற்றவாளி விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.

நெல்லை,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சுடலை(வயது53). இவர் கடந்த 2018-ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய வழக்கில் போலீசார் கைது செய்தனர். மேலும், சுடலை மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட கோர்ட்டில் இன்று சுடலையை மீண்டும் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டனர். பின்னர், நீதிமன்றத்தைவிட்டு வெளியேவந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை போலீசாருக்கு தெரியாமல் குடித்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக சுடலையை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தால் நெல்லை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story