வில்வித்தை போட்டியில் 2-வது இடம் பெற்று சாதனை


வில்வித்தை போட்டியில் 2-வது இடம் பெற்று சாதனை
x

வில்வித்தை போட்டியில் 2-வது இடம் பெற்று மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

கரூர்

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வில்வித்தை போட்டி இந்தியன், ரிக்கோவ் மற்றும் காம்பவுண்ட் ஆகிய 3 பிரிவுகளில் புன்னம் சத்திரம் அன்னை மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை செயலாளர் காளிதாசன், ஹோலிகிராஸ் கல்லூரி பெண்கள் ஒருங்கிணைப்பாளர் திரவியா கிளாடி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஆண்கள் ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பெரம்பலூர், திருச்சி, கரூர் பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில், பெண்கள் பிரிவில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதல் இடத்தையும், கரூர் அன்னை மகளிர் கல்லூரி 2-ம் இடத்தையும், கரூர் வள்ளுவர் கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி, 3-வது இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.

ஆண்கள் பிரிவில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதலிடத்தையும், திருச்சி தேசிய கல்லூரி 2-வது இடத்தையும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, மற்றும் தஞ்சாவூர் ராஜா சரபோஜி கல்லூரி 3-வது இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களை அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மலையப்பசாமி, தலைவர் தங்கராசு, செயலாளர் டாக்டர் முத்துக்குமார், பொருளாளர் கந்தசாமி, அறக்கட்டளை உறுப்பினர்கள், முதல்வர் முனைவர் சாருமதி, உடற்கல்வி இயக்குனர் கலா, பயிற்றுனர்கள் கார்த்திகேயன், சத்யா, வில் வித்தை பயிற்றுனர், துணை முதல்வர், கலைபுலத்தலைவர், ஆசிரியர்கள் ஆகியோர் வாழ்த்தினர்.


Next Story