தேசிய அளவிலான ரோல் பால் போட்டியில் தர்மபுரி விஜய் வித்யாலயா பள்ளி மாணவன் சாதனை படைத்தான்.


தேசிய அளவிலான ரோல் பால் போட்டியில்  தர்மபுரி விஜய் வித்யாலயா பள்ளி மாணவன் சாதனை படைத்தான்.
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தேசிய அளவிலான ரோல் பால் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தர்மபுரி காந்திநகர் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் சஞ்சய் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தார். இந்த மாணவனை பாராட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெண்கல பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கி பாராட்டினார். இந்த சாதனை படைத்த மாணவனை ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களில் தலைவர் டி.என்.சி.மணிவண்ணன், தாளாளர் செல்வி மணிவண்ணன், துணைத்தலைவர் தீபக் மணிவண்ணன், நிர்வாக இயக்குனர் ஷரவந்தி தீபக், பள்ளி துணை முதல்வர் ஜோஸ்பின் ஜெசிந்தா, உடற்கல்வி ஆசிரியர்கள் வாசு, பரமேஷ், கலைச்செல்வன், ஆதிரை ஆகியோர் பாராட்டினர்.


Next Story