ஈரோடு மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவி மாநில ஜிம்னாஸ்டிக் போட்டியில் சாதனை


ஈரோடு மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவி மாநில ஜிம்னாஸ்டிக் போட்டியில் சாதனை
x

ஈரோடு மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவி மாநில ஜிம்னாஸ்டிக் போட்டியில் சாதனை

ஈரோடு

தமிழ்நாடு அக்ரோபேட்டிக் ஜிம்னாஸ்டிக் மாநில சாம்பியன் கோப்பை கடந்த 1 மற்றும் 2-ந் தேதிகளில் மதுரையில் நடந்தது. இதில் ஈரோடு மாவட்டம் சார்பில் ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூட 8-ம் வகுப்பு மாணவர் ஆர்.யோகன், 6-ம் வகுப்பு மாணவி ஆர்.நேத்ரா ஸ்ரீ ஆகியோர் பங்கேற்று விளையாடினார்கள். மாநிலம் முழுவதும் இருந்து ஜிம்னாஸ்டிக் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் மாணவி நேத்ரா ஸ்ரீ சிறப்பாக விளையாடி ஒரு பிரிவில் முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கமும், இன்னொரு பிரிவில் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும் வென்றார். மாணவர் யோகன் 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் பெற்றார்.

இதன் மூலம் இவர்கள் 2 பேரும் அடுத்த மாதம் (நவம்பர்) இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தேர்வு பெற்று உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்துக்கும், பள்ளிக்கூடத்துக்கும் பெருமை சேர்ந்த மாணவர் யோகன், மாணவி நேத்ராஸ்ரீயை தலைமை ஆசிரியை கே.சுமதி மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.


Next Story