சிலம்பம் போட்டியில் கல்லூரி மாணவர் சாதனை


சிலம்பம் போட்டியில் கல்லூரி மாணவர் சாதனை
x
தினத்தந்தி 4 Sept 2023 5:24 PM IST (Updated: 4 Sept 2023 5:57 PM IST)
t-max-icont-min-icon

மலேசியா போர்க்கலை சிலம்பம் அமைப்பு சார்பில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் விக்னேஷ் பங்கு பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

திருவள்ளூர்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த மாதம் 26, 27-ந் தேதிகளில் மலேசியா போர்க்கலை சிலம்பம் அமைப்பு சார்பில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் இந்தியாவிற்காக தமிழ்நாட்டை சேர்ந்த திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எலக்ட்ரானிக் சயின்ஸ் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் கோ.விக்னேஷ் பங்கு பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ள மாணவருக்கு ஜெயா கல்வி குழும தலைவர் முனைவர் அ.கனகராஜ் வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து துணை செயலாளர் டாக்டர். க.தீனா, துணைத் தலைவர் என்ஜினீயர் த.நவராஜ், கல்லூரி முதல்வர் முனைவர் குகன், துணை முதல்வர் முனைவர் விஜயகுமார் மற்றும் உடற்கல்வித்துறை பேராசிரியர் சிலம்பரசன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

1 More update

Next Story