பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை
மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்து உள்ளனர்.
மானாமதுரை,
தேசிய இளைஞர் விளையாட்டு மற்றும் கல்வி கூட்டமைப்பு(இந்தியா), தேனி மாவட்ட விைளயாட்டு கழகம், தேனி வைகை அரிமா சங்கம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியை தேனியில் நடத்தியது. இதில் பல ஊர்களில் இருந்தும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மானாமதுரையை சேர்ந்த பள்ளி மாணவர்களும் போட்டியில் கலந்து வெற்றி பெற்றனர்.
போட்டியில் மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பள்ளி மாணவர்கள் 10 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் பிரிவில் மித்ரா சுருள் வால் போட்டியில் முதலிடத்தையும் ஒற்றைக்கம்பு தனி திறமையில் 3 இடமும், ஹர்ஷிதா சுருள் போட்டியில் 2-ம் இடமும் தனித்திறமையில் மூன்றாம் இடமும் பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் தக்சித் தனித்திறமை 2-ம் இடமும் இரட்டைக் கம்பு பிரிவில் முதலிடத்தையும், மணீஸ் குமார் சுருள் போட்டியில் முதலிடத்தையும் தனித்திறமையில் 2-ம் இடத்தையும் இரட்டைக் கம்பு பிரிவில் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளார். இதே போல 12, 13, 14 வயது பிரிவில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.