கரும்பை பதிவு செய்யாமல்முறைகேடாக விற்றால் நடவடிக்கை


கரும்பை பதிவு செய்யாமல்முறைகேடாக விற்றால் நடவடிக்கை
x

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பை பதிவு செய்யாமல் முறைகேடாக விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேலாண் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல்

மோகனூர்

மோகனூர் சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் மல்லிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023–-24-ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்திற்கு 4,270 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு, 2 லட்சம் டன்கள் மதிப்பில் வருகிற நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் அரவை தொடங்க உள்ளது. கரும்பை ஆலைக்கு பதிவு செய்யாத அங்கத்தினர்கள், சர்க்கரை ஆலைக்கு கரும்பை பதிவு செய்து கொள்ள வேண்டும். சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யாத கரும்பை, முறைகேடான வகையில் வெளிச்சந்தையிலோ, வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கோ அல்லது தனியார் சர்க்கரை ஆலைக்கோ, தடையில்லா சான்று பெறாமல் விற்பனை செய்யக்கூடாது.

அதையும் மீறி விற்பனை செய்வதாக ஆலை நிர்வாகத்திற்கு புகார்கள் வரும் பட்சத்தில், முறைகேடுகளில் ஈடுபடும் இடைத்தரகர்கள், வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் மீது கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story