உணவகங்களில் அனுமதி இல்லாமல் மது விற்றால் நடவடிக்கை - தமிழக அரசு


உணவகங்களில் அனுமதி இல்லாமல் மது விற்றால் நடவடிக்கை - தமிழக அரசு
x

கோப்புப்படம்

உரிய அனுமதி பெறாமல் உணவகங்கள், தாபா உள்ளிட்ட சிறு கடைகளில் மதுவிற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

சென்னை,

தமிழகத்திலுள்ள ஒருசில உணவகங்கள் மற்றும் சாலையோர தாபா போன்ற கடைகளில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக சமீபத்தில் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், முறைகேடாக மதுபானம் விற்பனை செய்வது தொடர்பாக தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் மதுபானங்கள் விற்பனை செய்யும்பொருட்டு தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள், 1981-ன் கீழ் மதுபான விற்பனை உரிமங்கள் வழங்கப்படுகிறது. அவ்வாறு உரிமம் ஏதும் பெறாமல் உணவகங்கள், தாபா போன்ற சிறுகடைகள் மற்றும் உரிமம் பெறாத வேறு இடத்திலும் மதுபானம் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். மீறி மதுபானம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story