அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி போலீசில் புகார்
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி போலீசில் புகார் அளித்தார்.
பெரம்பலூர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் நகர செயலாளரும், பெரம்பலூர் நகராட்சி 8-வது வார்டு கவுன்சிலருமான தங்க.சண்முகசுந்தரம் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், பறையர் சாதியை இழிவுபடுத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
Related Tags :
Next Story