நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்


நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
x

நத்தக்காடையூர் அருகே புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

திருப்பூர்

நத்தக்காடையூர் அருகே புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

நொய்யல் ஆறு

பழையகோட்டை ஊராட்சியில் புதுவெங்கரையாம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையை இணைக்கும் இந்த கிராமத்தில் அருகே நொய்யல் ஆறு செல்கிறது. இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரு தாழ்வான தரைப்பாலம் கட்டப்பட்டு மேலே கான்கிரீட் தளத்தில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தாழ்வான தரைப்பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் போக்குவரத்து பாதுகாப்பிற்கு தடுப்புச்சுவர் எதுவும் கட்டப்படவில்லை.

இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள கான்கிரீட் தரைப்பாலத்தை கடந்து காங்கயம், நத்தக்காடையூர் பகுதிகளில் இருந்து தினந்தோறும் கார், லாரி, டெம்போ, வேன், சரக்கு ஆட்டோ ஆகிய கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கடந்து ஈரோடு மாவட்டம், தாண்டாம்பாளையம், கந்தசாமிபாளையம், சிவகிரி, தாமரைபாளையம், கணபதிபாளையம் பாசூர், கொடுமுடி, ஊஞ்சலூர், எழுமாத்தூர், மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

பழமையான பாலம்

நொய்யல் ஆற்று தாழ்வான தரைப்பாலத்தின் இருபுறமும் தற்போது சீமை கருவேலமரங்கள், செடி, கொடிகள், சிறு மரங்கள் நீண்டு வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் கனராக இருசக்கர வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்லும் போது முட்புதர்களை உரசி சென்று வருகின்றன. மேலும் இந்த தாழ்வான தரைப்பாலத்தில் அமைக்கப்பட்டு உள்ள கான்கிரீட் தள சாலை மிகவும் பழுதடைந்து கான்கிரீட் பெயர்ந்து, குண்டும், குழியுமாக எப்போது வேண்டுமானாலும் இடிந்து ஒயிலாட்டின் உள்ளே விழும் அபாய நிலையில் உள்ளது.

மேலும் இந்த பாலம் தொடங்கும் இடத்தில் இருபுறமும் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இவ்வழியே கனரக வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

துரித நடவடிக்கை

எனவே மாவட்ட நிர்வாகம் நொய்யல் ஆற்றின் குறுக்கே பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ள தாழ்வான கான்கிரீட் தரைப்பாலத்தை முற்றிலும் இடித்து அகற்றி விட்டு, இருபுறமும் புதிய தடுப்பு சுவருடன் கூடிய உயர்மட்ட மேம்பாலம் கட்டி சீரான வாகன போக்குவரத்து நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story