பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை -ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்


பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை -ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை -ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

நீலகிரி

குன்னூர்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழில் சார்ந்தோர் சந்திக்கும் சவால்கள் குறித்து விவாத நிகழ்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டம் குன்னூர் உபாசி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேயிலை வாரிய தென்மண்டல செயல் இயக்குநர் டாக்டர் முத்துகுமார் தலைமை தாங்கினார். தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி. மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தேயிலைதொழிற்சாலை உரிமையாளர்கள், இடைத்தரகர்களுடன் விலையை எவ்வாறு அதிகரிக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது. தேயிலை விவசாயிகள் பச்சை தேயிலைக்கு குறைந்த பட்ச விலையாக 30 ரூபாய் கிடைக்க வேண்டும் என தங்களது வாதங்களை முன்வைத்தனர். விரைவில் தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story