நகராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை


நகராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை
x

தமிழகத்திலும் நகராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.

விருதுநகர்


தமிழகத்திலும் நகராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.

வாழ்வாதாரம்

விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:- கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட 100 நாள் வேலை திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது பா.ஜ.க. அரசு இதற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து விட்ட நிலையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதற்கான நிதிஒதுக்கீட்டை குறைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் தற்போது தமிழக அரசு பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு நகராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதேபோன்று தமிழகத்திலும் நகராட்சி பகுதிகளில் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

கூடுதல் ெரயில்கள்

தென் மாவட்டங்களுக்கான இருவழி அகல ெரயில் பாதை பணி முடிந்து விட்ட நிலையில் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ெரயில்களை இயக்க வேண்டும். விருதுநகர் உள்ளிட்ட ெரயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டும்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தமிழக அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கீடு பெற்று அனைத்து கிராம பஞ்சாயத்துக்கள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு வழங்கி குடிநீர் பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தை பொருத்தமட்டில் அங்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது உறுதி.

பா.ஜ.க. தோல்வியை சந்திக்கும்

பா.ஜ.க. மீது மாநில மக்களுக்கு உள்ள வெறுப்பு காரணமாக தோல்வியை சந்திக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விருதுநகர் யூனியன் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். கன்னிசேரி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விருதுநகர் மாவட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story