ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை


ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை
x

மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்க கூட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். திருச்சி மண்டல செயலாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். திட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றர். இதில் தலைமை முதன்மை செயலாளர் முரளிகுமார், மாநில வெளியீட்டு செயலாளர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் கேங்மேன்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்சார வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். ஓராண்டு பணி முடிந்தவுடன் கேங்மேன் பணியாளர்களை சொந்த மாவட்டத்திலேயே பணியாற்றும் வகையில் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் திட்ட சிறப்புத்தலைவர் வெள்ளிமலை, துணை தலைவர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story