கண்மாய், குளங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை -கலெக்டர் தகவல்


கண்மாய், குளங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை -கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM (Updated: 5 Oct 2023 6:47 PM)
t-max-icont-min-icon

கண்மாய், குளங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 639 பொதுப்பணித்துறை கண்மாய்கள் மற்றும் 4,293 ஊராட்சி கண்மாய் மற்றும் குளங்கள் ஆகியவற்றில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வேரோடு முழுவதுமாக அகற்றி அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் https://ramanathapuram.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இணையதளம் மூலம் விண்ணப்பம்

சீமைக்கருவேல மரங்களை அகற்றி அப்புறப்படுத்துவதற்காக வரும் விண்ணப்பங்களை உரிய விதிமுறைகளை பின்பற்றி பரிசீலித்து பொது ஏலத்தில் விட விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த இணையதள முகவரி ஒற்றைச்சாளர முறையில் செயல்படுவதால் மக்கள் இந்த இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 More update

Related Tags :
Next Story