சீர்காழி பகுதியில் இன்றிரவுக்குள் மின்விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை - அமைச்சர் செந்தில்பாலாஜி


சீர்காழி பகுதியில் இன்றிரவுக்குள் மின்விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை - அமைச்சர் செந்தில்பாலாஜி
x

வரலாறு காணாத மழையால் சீர்காழி குட்டி தீவு போல மாறியுள்ளது.

சீர்காழி,

சீர்காழி பகுதியில் இடைவிடாது பெய்து வரும் அதி கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது மட்டுமின்றி வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்துள்ளன. பயிர்கள் கடுமையான சேதம் அடைந்துள்ளது.

கனமழையால் சீர்காழியில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:-

சீர்காழி ஒரு சில பகுதிகளில் இன்றிரவுக்குள் மின்விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்த பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்படும். சேதமடைந்த மின்மாற்றிகளை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எந்த புகாராக இருந்தாலும் உடனடியாக தீர்வு காணப்படும். பணி செய்யாத மின்வாரிய ஊழியர்கள்,அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


Next Story