பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கினால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கினால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
x

திருப்பத்தூரில் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கினால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கினால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசலை அவர்கள் கொண்டுவரும் கேன், கண்ணாடி மற்றும் வாட்டர் பாட்டில்களில் கொடுக்க வேண்டாம். அதையும் மீறி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி, அதனால் மாவட்டத்தில் ஏதாவது சம்பவமோ அல்லது போலீசாரின் தீவிர வாகன சோதனையின்போது கைப்பற்றப்பட்டாலோ சம்பந்தப்பட்ட பங்க் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த பெட்ரோல் பங்கின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Next Story