திருப்பூர் சப்-கலெக்டராக நடிகர் சின்னிஜெயந்த் மகன் பொறுப்பேற்பு


திருப்பூர் சப்-கலெக்டராக நடிகர் சின்னிஜெயந்த் மகன் பொறுப்பேற்பு
x

திருப்பூர் சப்-கலெக்டராக நடிகர் சின்னிஜெயந்த் மகன் பொறுப்பேற்பு.

திருப்பூர்,

திருப்பூர் சப்-கலெக்டராக பணியாற்றி வந்த பண்டரிநாதன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக டெல்லியில் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவி செயலாளராக பணியாற்றி வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் (வயது 29) திருப்பூர் சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டார். இவர் நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஆவார்.

திருப்பூர் சப்-கலெக்டராக ஸ்ருதன் ஜெய் நாராயணன் நேற்று காலை சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், மக்களின் நலனுக்காக உழைப்பேன் என்றார்.

ஸ்ருதன் ஜெய் நாராயணன் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்து ஐ.டி. துறையில் பணியாற்றியவர். அதன்பிறகு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி கடந்த 2020-ம் ஆண்டு அகில இந்திய அளவில் 75-வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றார். இவர் தூத்துக்குடி மாவட்ட பயிற்சி உதவி கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார்.


Next Story