நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சாமி தரிசனம்
உலகளந்த பெருமாள் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சாமி தரிசனம்
திருக்கோவிலூர்
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோவில் வரலாறு, நடைபெறும் விழாக்கள் குறித்து கோவில் ஊழியர்கள் எடுத்து கூறினர். தொடர்ந்து சன்னதி தெருவில் உள்ள கோவில் மடாதிபதி ஜீயர் வீட்டுக்கு சென்ற சத்யநாராயணாவுக்கு மடாதிபதி பிரசாதம் கொடுத்து அருளாசி வழங்கினார்.
அப்போது அரசு முன்னாள் வக்கீலும், அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளருமான வக்கீல் எஸ்.ரஜினிகாந்த், பெங்களூரு தொழில் அதிபர் மணி, திருக்கோவிலூர் நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் இளவரசன், பா.ஜ.க. மாநில தரவு மேலாண்மை பிரிவு செயலாளர் தொழிலதிபர் கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் ஜீவா.வசந்தன், நகர தலைவர் எஸ்.டி.புவனேஸ்வரி, மாவட்ட கூட்டுறவு அணி தலைவர் ஆலம்பாடி ரவி, ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி அறுமலை கோபி உள்பட பலர் உடன் இருந்தனர்.