நடிகர் விஜய் பிறந்த நாள் விழா


நடிகர் விஜய் பிறந்த நாள் விழா
x

பெரியகுளத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் மன்றத்தினர் சார்பில் விஜய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தேனி

பெரியகுளத்தில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவையொட்டி தாமரைக்குளத்தில் மனநல காப்பகத்தில் மனநலம் குன்றியவர்களுக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்களுக்கு பிரியாணி பொட்டலங்கள், இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் தினேஷ் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் வாஜித், முனீஸ், டேவிட், மது, சந்துரு, தாமரைக்குளம் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி விஜய் ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர்.


Next Story