நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும் - தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் வலியுறுத்தல்


நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும் - தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் வலியுறுத்தல்
x

விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று முதல் ஜன.1ம் தேதி இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட உள்ளது.

சென்னை,

தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சி முன்னாள் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலை காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலில் நேற்று வைக்கப்பட்டிருந்தது. அங்கு அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நேற்று பிற்பகல் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 72 குண்டுகள் முழங்க முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் அரசு மரியாதையுடன் இரவு 7 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று முதல் ஜன.1ம் தேதி இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க வலியுறுத்த உள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் விஜயகாந்த் சிலை வைப்பதற்கு தமிழக அரசிடம் கடிதம் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story