பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்ப்பு வரவேற்கத்தக்கது - ராமதாஸ்


பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்ப்பு வரவேற்கத்தக்கது - ராமதாஸ்
x

நரிக்குறவர்கள் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

நரிக்குறவர், குருவிக்காரர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இனி பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் ஆகிய சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்களின் சமூக நீதியை முழுமையாக உறுதி செய்ய, அவர்களுக்கு உடனுக்குடன் சாதி சான்றிதழ் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்!" என்று கூறியுள்ளார்.



Next Story