கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற கூடுதலாக 6 மாத கால அவகாசம்


கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற கூடுதலாக 6 மாத கால அவகாசம்
x
தினத்தந்தி 22 July 2022 12:43 AM IST (Updated: 22 July 2022 12:44 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற கூடுதலாக 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1-1-2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இத்துறையால் அனுமதி வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண் 76, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி (நா.வா (3) ) துறை நாள் 22-3-2021 முதல் 4-4-2021 வரை காலத்தில் விண்ணப்பித்தவர்கள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகி அனுமதி பெற்று கொள்ளலாம். மேலும் மீண்டும் கல்வி நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில்www.tn.gov.in/tcpஎன்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பிக்க 1-7-2022 முதல் கூடுதலாக 6 மாத காலத்திற்கு கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவித்துள்ள ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி பெறலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


Next Story