வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை பார்வையிட கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) அலர்மேலு மங்கை, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்தார். பின்னர் அவர் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை அந்தந்த கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோன்று மன்றாம்பாளையம், குருநெல்லிபாளையம், வரதனூர், கோவில்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளி கட்டிட பணிகளை தரமாக செய்ய ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட உள்ள பகுதிகளையும் கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சிக்கந்தர் பாட்சா மற்றும் பொறியாளர்கள், ஒன்றிய பணியாளர்கள் உடனிருந்தனர்.