51 பேருக்கு ரூ.1 கோடி கூடுதல் இழப்பீடு
என்.எல்.சி.க்கு நிலம் வழங்கிய 51 பேருக்கு ரூ.1 கோடி கூடுதல் இழப்பீடு வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் கத்தாழை, காரிவெட்டி, கீழ் வளையமாதேவி, மேல் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு, அக்கிராமங்களை சோ்ந்த மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதனை ஏற்ற என்.எல்.சி. இந்தியா நிறுவனம் முதல் கட்டமாக கடந்த மாதம் 6-ந்தேதி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் முன்னிலையில் 3.15 ஹெக்டேர் நிலம் வழங்கிய பயனாளிகள் 9 பேருக்கு மொத்தம் ரூ.23 லட்சத்து 34 ஆயிரம் கூடுதல் இழப்பீடாக வழங்கப்பட்டது.
அதைத்தொடா்ந்து, இரண்டாம் கட்டமாக 16.7 ஹெக்டேர் நிலம் வழங்கிய 51 பயனாளி்களுக்கு கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர், நில எடுப்பு அதிகாரி ஆகியோர் முன்னிலையில் மொத்தம் ரூ.1 கோடியே 16 லட்சத்துக்கான காசோலைகளை என்.எல்.சி. இந்தியா நிறுவன நிலத்துறை அதிகாரிகள் வழங்கினா்.