போதைப்பொருட்களை ஒழிக்க கூடுதல் கவனம-புதிதாக பொறுப்பேற்ற டி.ஐ.ஜி. உறுதி


போதைப்பொருட்களை ஒழிக்க கூடுதல் கவனம-புதிதாக பொறுப்பேற்ற டி.ஐ.ஜி. உறுதி
x

போதைப்பொருட்களை ஒழிக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும் என மதுரை சரக டி.ஐ.ஜி. ரம்யா பாரதி கூறினார்.

மதுரை


போதைப்பொருட்களை ஒழிக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும் என மதுரை சரக டி.ஐ.ஜி. ரம்யா பாரதி கூறினார்.

பொறுப்பேற்பு

மதுரை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த பொன்னி, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ரம்யா பாரதி, மதுரை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள மதுரை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் நேற்று அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் மற்றும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை சரகத்துக்கு உட்பட்ட மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஏறத்தாழ 88 போலீஸ் நிலையங்கள் உள்ளன. மதுரை சரகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் குற்றச்சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் அளிக்கப்படும் புகார்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

போதைப்பொருட்கள்

தென் மண்டலத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள், சொத்துக்கள் பறிமுதல் போன்ற பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் போதைப்பொருள்களை ஒழிக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும். மதுரை சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாதிய மோதல்கள் நடைபெறாமல் தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சாதிய மோதல்கள் குறித்த வழக்குகளில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதுதொடர்பான புகார்கள் மீது உடனுக்குடன் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியாக தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் எப்போதும் பொதுமக்களின் நண்பர்களாகவே இருக்கின்றனர்.

காவல்துறை என்றாலே ரோந்துப்பணி மிக முக்கியமானது. மேலும் இரவு ரோந்து பணியின் மூலம் குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும் என்பதால் ரோந்து பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பொதுமக்களை அவர்களது பகுதிகளுக்குச்சென்று நேரில் சந்தித்து குறைகள் கேட்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story