அடைக்கல பிச்சை அய்யனார் கோவில் தேரோட்டம்


அடைக்கல பிச்சை அய்யனார் கோவில் தேரோட்டம்
x

அடைக்கல பிச்சை அய்யனார் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

கீரனூர் அருகே உப்பிலியக்குடியில் அடைக்கல பிச்சை அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் உப்பிலியக்குடி, வடுகப்பட்டி, கீரனூர், கொத்தமங்கலப்பட்டி, பசுமலைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story