ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள்


ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள்
x

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள் விடுக்கப்பட்டள்ளது.

பெரம்பலூர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராஜாங்கம், பொருளாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கத்தின் நிறுவனர் தங்கவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினார். விடுதிகளில் காலியாக உள்ள சமையலர், காவலர், தூய்மை பணியாளர்கள் பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும். மாவட்டந்தோறும் விடுதி சமையலர் மற்றும் காவலர்களின் பணி மூப்பு பட்டியல் வெளியிட்டு, அவர்களுக்கு முறையே காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் மற்றும் கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை காலமுறை ஊதிய பணியாளர்களாக நியமிக்க வேண்டும். பணியில் இருக்கும் போது இறந்த விடுதி பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

1 More update

Next Story