ஆடித்திருவிழா தெப்ப உற்சவம்


ஆடித்திருவிழா தெப்ப உற்சவம்
x

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடித்திருவிழா தெப்ப உற்சவம் நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் தாடிக்கொம்புவில் பிரசித்தி பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா நடந்தது. விழாவையொட்டி திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து மாலை ஆடித்திருவிழா தெப்ப உற்சவ நிகழ்ச்சி நடந்தது. இதில் தெப்பத்தில் சவுந்தரராஜா, சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் சமேதமாக எழுந்தருளினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story