கம்பம் அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


கம்பம் அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 22 July 2022 3:34 PM IST (Updated: 22 July 2022 3:37 PM IST)
t-max-icont-min-icon

கம்பம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

கம்பம்,

தேனி மாவட்டம் கம்பத்தில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று கவுமாரியம்மன்கோவில் அம்மனுக்கு மஞ்சள்,இளநீர்,தயிர்,பச்சரிமாவு உள்ளிட்ட 11 அபிஷேகங்கள் நடைபெற்றன.பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் சாமாண்டிபுரத்தில் உள்ள சாமாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு வளையல் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story