ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பெருவிழா


ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பெருவிழா
x

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பெருவிழா நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பெருவிழா நடந்தது.

ஆரணி கோட்டை மைதானம் அருகே காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள 'வேண்டும் வரங்களை தந்திடும்' கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளி பெரு விழாவை முன்னிட்டு அதிகாலையிலேயே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா அலங்காரம், மகா தீபாராதனையுடன் நடைபெற்றது.

தொடர்ந்து ஆரணி கமண்டல நாக நதி ஆற்றங்கரையிலிருந்து பூங்கரகம் ஜோடித்து பம்பை உடுக்கை, நாதஸ்வரம், மேள வாத்தியங்கள், மலைவாழ் மக்களின் கிராமிய நடனங்களுடன் நகரின் பல்வேறு வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.

பின்னர் கோவில் வளாகத்தில் பெரிய இரும்பு கொப்பரையில் பக்தர்கள் கொண்டுவந்த கூழை ஊற்றினர். பம்பை உடுக்கைகளுடன் வர்ணிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு அனைவருக்கும் கூழ் வினியோகிக்கப்பட்டது.

மாலையில் நூதன புஷ்பப்பல்லக்கில் முகப்பில் வேண்டும் வரம் தந்திடும் கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மனையும், ஒருபுறம் திருக்கடையூர் அபிராமி அம்பாளும், ் காசி ஸ்ரீ அன்னபூரணி அன்னையையும் அலங்கரித்து இருந்தனர். புஷ்பப் பல்லக்கினை ரத்தனகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் தொடங்கி வைத்தார். இசைக்கச்சேரி, கிராமிய கலை கிராமிய நிகழ்ச்சிகளுடன் பல்வேறு பகுதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.

விழாவில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, ராஜாங்கம், ஆரணி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.விஜயா, சார்பு நீதிபதி தாவூத் அம்மாள், மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பி.டி.சதீஷ்குமார், நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆர். கார்த்திகேயன், ஆரணி சார் பதிவாளர் (பொறுப்பு) தெய்வசிகாமணி, மேற்கு ஆரணி ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் உள்பட பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாட்டினை விழா குழு தலைவர் ஜி.வி.கஜேந்திரன் மற்றும் விழா குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Next Story