ஆடிமாத பவுர்ணமி: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு...!


ஆடிமாத பவுர்ணமி: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு...!
x

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்குவது வழக்கம்.

இன்று ஆடி மாதம் பவுர்ணமி ஆகும். ஆனால் மலைப்பகுதியில் மழை பெய்வதற்கு உண்டான அறிகுறிகள் இருப்பதாலும், நீர்வரத்து ஓடைகளில் அதிகமாக உள்ளதாலும் இன்று வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆடிமாத பவுர்ணமியை முன்னிட்டு அனுமதி ரத்து என்பது தெரியாமல் அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து இருப்பதால் அனுமதி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

கோவிலுக்கு செல்வதற்கு தடை உள்ளதால் அனுமதி வழங்கப்பட மாட்டாது என வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் அனுமதி வழங்காததால் எண்ணற்ற பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story