தென்னிந்தியாவில் முதல் முறையாக அரண்மனை அமைப்பிலான 'வில்லா'க்களை அறிமுகப்படுத்தும் ஆதித்யாராம் அரண்மனை


“ஆதித்யாராம் அரண்மனை” சென்னையின் வளமான கட்டிடக்கலை வரலாற்றின் சான்றாகவும், சமகாலத்தில் கட்டப்பட்ட முதல் அரண்மனையாகவும் உள்ளது.

இந்திய வரலாற்றில், 1947க்குப் பிறகு எந்த அரண்மனையும் கட்டப்படவில்லை. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, பெரும்பாலான அரண்மனைகளின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. பல பெரிய அரண்மனைகளும் அருங்காட்சியகங்கள் மற்றும் ஹோட்டல்களாக மாற்றப்பட்டன. தற்போது முதன்முறையாக 1947 க்கு பிறகு ஒரு தொலைநோக்கு பார்வையுடன் பிரபல தொழில் அதிபரும் ஆதித்யாராம் குழும நிறுவனங்களின் தலைவருமான ஆதித்யாராம் அவர்களால் சென்னை நகரில் ஒரு அரண்மனை கட்டப்பட்டுள்ளது "ஆதித்யாராம் அரண்மனை".

"ஆதித்யாராம் அரண்மனை" சென்னையின் வளமான கட்டிடக்கலை வரலாற்றின் சான்றாகவும், சமகாலத்தில் கட்டப்பட்ட முதல் அரண்மனையாகவும் உள்ளது. மற்றுமொரு சிறப்பம்சமாக ஆதித்யாராம் அரண்மனை தேசிய அளவில் ட்விட்டர் டாப் 3 ட்ரெண்டிங்கில் இடம்பெற்றிருப்பது சென்னையின் பெருமையாக உள்ளது.

ஆதித்யாராம் குழுமம் தென்னிந்திய அளவில் ரியல் எஸ்டேட் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் தமது முத்திரை பதித்த ஓரு முக்கியமான நிறுவனமாகும். இந்த குழுமம் தனது வெற்றி கால்தடத்தை 3 மாநிலங்களாகிய தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாவட்டங்களில் கொண்டுள்ளது. ஆதித்யாராம் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான ஆதித்யாராம் அவர்கள் முதல் தலைமுறை தொழில்முனைவோர் ஆவர்.

இவர் தனது முத்திரையைக் ரியல் எஸ்டேட், கார்ப்பரேட், மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் கால் பதித்து உச்சம் தொட்ட பில்லியனர் ஆவார். விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர். இவரது தலைமையில் ஆதித்யாராம் குழுமம், ரியாலிட்டி மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் ஒரு அழியாத அடையாளத்தை பதிந்துள்ளது . தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இவர் சென்னையின் அடையாளமாக ஆதித்யாராம் அரண்மனையை உருவாக்கி இருக்கிறார்.

இந்த அரண்மனை இத்தாலிய பளிங்கு மற்றும் தனித்துவமான ஓனிக்ஸ் மூலம் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடமும் உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, ராஜஸ்தானில் செதுக்கப்பட்ட பலஸ்டர்கள், தூண்களால் மற்றும் சிலைகளையும் கொண்டுள்ளது. மேலும் இந்த அரண்மனையில் ஜாகிங் டிராக், நீச்சல் குளம், புத்தர் சிலை கொண்ட அகுவரியம் மற்றும் பிரமிக்க வைக்கும் திரையரங்கமும் உள்ளது. அதே போல் ஆடம்பரமான ஸ்பா, ஜிம், ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

அரண்மனையில் வணிகக் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கான பிரத்யேக போர்டு ரூம் மற்றும் சேர்மன் அலுவலகம் உள்ளது. மேலும், அரண்மனையில் பொழுதுபோக்கு பில்லியர்ட்ஸ் விளையாட்டு அறை, தனி கோல்ஃப் கோர்ட் மற்றும் சொகுசு கார்கள் வைக்க 50 பிரத்தியேக இடங்கள் உள்ளது. மேலும் 80 க்கும் மேற்பட்ட வீட்டுப் பணியாளர்கள் தங்கும் அறைகளும் இதனுள் அடங்குவது குறிப்பிடத்தக்கது. அரண்மனையைச் சுற்றியுள்ள நிலப்பரப்புகளில் இயற்கையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆதித்யாராம் அரண்மனை, ஆதித்யாராம் அவர்களின் கடினமான உழைப்பும், அர்ப்பணிப்பும் மற்றும் தனித்துவத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதன் தொடர்ச்சியாக, ஆதித்யாராம் குழுமம் தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆதித்யாராம் அரண்மனை நகரம் என்ற அரண்மனை அமைப்பிலான 'வில்லா'க்களை இக்குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவின் கீழ் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அரண்மனை வில்லாக்கள் கட்டுமான துறையின் வளர்ச்சியில் அடுத்த கட்டமாகவும் கலாச்சார அடையாளத்தின் வளமான பாரம்பரியத்தையும் கொண்டாடுகிறது.

1 More update

Next Story