மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு
மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு
திருப்பூர்
திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பிற்கான மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு கல்லூரியில் நடைபெற உள்ளது. அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்து இளநிலை பாடப்பிரிவுக்கான சிறப்பு ஒதுக்கீடு பெற்றவர்கள் அதாவது முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி, விளையாட்டு, தேசிய மாணவர் படையினர் மாணவிகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
வருகிற 1-ந் தேதி மற்றும் 2-ந்தேதிகளில், அறிவியல் பாடப்பிரிவுகளான பி.எஸ்சி.கணிதம், இயற்பியல், இயற்பியல் சி.ஏ., வேதியியல், தாவரவியல், விலங்கியல், உணவு அறிவியல் மற்றும் நியூட்ரிசியன், மைக்ரோ பையாலஜி, கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் படிப்புக்கான கலந்தாய்வு நடக்கிறது. 3-ந்தேதி மற்றும் 5-ந்தேதிகளில், வணிகவியல், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு, வணிக நிர்வாகவியல், வரலாறு, பொருளியல் படிப்புக்கான கலந்தாய்வு நடக்கிறது. 6-ந்தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
------------