மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 10-ந் தேதி தொடக்கம்


மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 10-ந் தேதி தொடக்கம்
x

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 10-ந் தேதி தொடங்குகிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.

இளநிலை பட்டங்களான பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ. ஆகிய படிப்புகளில் சேர கலந்தாய்வு நடக்கிறது. கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கலந்தாய்வு வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

இதில் முன்னாள் படை வீரரின் வாரிசு, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை, விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை போன்ற சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்கள் பங்கேற்கலாம்.

தொடர்ந்து கணிதம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.

அதன் பின்னர் வரலாறு, பொருளியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 17 மற்றும் 18-ந் தேதிகளில் கலந்தாய்வு நடக்கிறது.

தமிழ் மொழி பாடப்பிரிவுக்கு 22-ந் தேதி காலையிலும், அன்று பிற்பகல் ஆங்கில மொழி பாடப்பிரிவிற்கும் கலந்தாய்வு நடக்கிறது.

மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலமும், கல்லூரியின் இணையதளத்தின் மூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்லூரி தகவல் பலகையில் கட்-ஆப் மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு காலதாமதமாக வரும் மாணவர்கள் பங்கேற்க முடியாது.

இந்த தகவலை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story