அரசு வேளாண் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
அரசு வேளாண் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்தது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே குருக்கத்தியில் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு 2023-2024-ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் நடந்தது. இதில் 23 மாணவர்கள், 48 மாணவிகள் உள்பட 71 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து மாணவ, மாணவிகள் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். இதற்கான நிகழ்ச்சிக்கு கல்லூரி பொறுப்பு அதிகாரி ரவி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங், இணை பேராசிரியர்கள் அனுராதா கமல் குமரன், வனிதா மற்றும் மாணவ, மாணவிகளின், பெற்றோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story