அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை
பிரம்மதேசத்தில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம்
பிரம்மதேசம்
மரக்காணத்தை அடுத்த பிரம்மதேசம் கிராமத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அரசு ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான 2 ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை https://scert.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க இயலாத நிலையில் இருப்பவர்கள் பிரம்மதேசம் அரசு ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250, பொதுப் பிரிவினருக்கு ரூ.500 ஆகும். மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களை அறிய 6380325605, 8838592396 ஆகிய செல்போன் நம்பர்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.