தர்மபுரியில் விளையாட்டு விடுதிக்கு மாணவிகள் சேர்க்கை
தர்மபுரி
தர்மபுரி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவிகள் தங்கி விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் உள்ள 60 இருக்கைகளுக்கு 40 இடங்கள் காலியாக உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் விளையாட்டு விடுதியில் உள்ள காலி இருக்கைகளுக்கான மாணவிகள் சேர்க்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த சேர்க்கையின் போது ஏராளமான மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து சான்றிதழ்களை சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது.
Next Story