அரசு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை


அரசு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2022-ம் ஆண்டுக்கான மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் மூலம் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய அடுத்த மாதம்(ஜூலை) 20-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர் பயன்பெறும் வகையில் விண்ணப்பித்தல் தொடர்பான உரிய அறிவுரைகளை வழங்கவும், பதிவேற்றம் செய்யவும் உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு முதல்வர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், உளுந்தூர்பேட்டை தொலைபேசி எண் 04149-294339, தனி அலுவலர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், சங்கராபுரம், தொலைபேசி எண் 04151-235258, முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், சின்னசேலம், தொலைபேசி எண்-9380114610 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story