காலியாக உள்ள சில இடங்களுக்கு மாணவர் சேர்க்கை


காலியாக உள்ள சில இடங்களுக்கு மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அரசு கல்லூரியில் காலியாக உள்ள சில இடங்களுக்கு மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

கடலூர்

விருத்தாசலம்

விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரியில் காலியாக உள்ள தமிழ், இயற்பியல், வேதியியல், தாவரவியல் ஆகிய பாடங்களுக்கு தலா ஒரு இடங்களுக்கும், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு தலா 2 இடங்களுக்கும், கணினி அறிவியல் 3 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நாளை மறுநாள்(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. பிளஸ்-2 உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்க்கை விண்ணப்பத்தை கல்லூரியில் நேரடியாக பெற்று பூர்த்தி செய்து இன்று(செவ்வாய்கிழமை) மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். எனவே, சேரவிரும்பும் மாணவர்கள் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 10.00 மணி முதல் 11.00 மணிக்குள் தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வர் ராஜவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story