அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா


அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா
x

அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாப்பட்டது.

ராணிப்பேட்டை

அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பில் முத்துக்கடை, வாலாஜா, மாந்தாங்கல், ஆற்காடு உள்பட பல இடங்களில் கட்சி கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிகளில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்துகொண்டு, மாந்தாங்கல் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முத்துக்கடை பஸ் நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

முத்துக்கடை பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ராணிப்பேட்டை நகர கழக செயலாளர் கே.பி.சந்தோஷம் தலைமையில் நடைபெற்றது. அமைப்பு செயலாளர் ராமு, செய்தி தொடர்பாளரும், சிறுபான்மை நலப்பிரிவு துணை செயலாளருமான ஜவஹர் அலி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நகர செயலாளர்கள் டபல்யூ.ஜி.மோகன், இப்ராஹிம் கலிலுல்லா, விஜி, வேதகிரி, ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், சாரதி, தினகரன், தேவேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் ஜெயமணியன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுமைதாங்கி ஏழுமலை, சந்திரசேகர், மாநில அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் தமிழரசன், மாவட்ட பொருளாளர் ஷாபுதீன், அவைத்தலைவர் நந்தகோபால், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் முஹம்மது உமர் பரூக் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.


Next Story