ின்கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


ின்கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

மின்கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வை கண்டித்து திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.முக. சார்பில் உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதுபோல் மடத்துக்குளத்திலும் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

திருப்பூர்


மின்கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வை கண்டித்து திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.முக. சார்பில் உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதுபோல் மடத்துக்குளத்திலும் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உடுமலை மத்திய பஸ்நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கரைப்புதூர் நடராஜன், பரமசிவம், அ.தி.மு.க. உடுமலை நகர செயலாளர் ஏ.ஹக்கீம், மாவட்ட ஆவின் தலைவர் வக்கீல் கே.மனோகரன், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முருகேசன், புறநகர் மேற்கு மாவட்ட

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் துபாய் ஆறுமுகம் உள்பட திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை மற்றும் பல்லடம் சட்டமன்றதொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் மற்றும் சார்பு அணியினர் திரளாக கலந்துகொண்டனர்.

மடத்துக்குளம்

இதுபோல் மின் கட்டண உயர்வுக்கு எதிராக தி.மு.க. அரசை கண்டித்து மடத்துக்குளம் நால் ரோட்டில் மகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்

" திமுக அரசு மக்களை வஞ்சிக்கிறது, தேர்தல் வாக்குறுதிக்கு புறம்பாக மின் கட்டண உயர்வை அதிகரித்துள்ளது. வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயர்த்தி உள்ளது. இதனால் நடுத்தர, ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதே போல சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடு இன்றி மக்கள் அச்சப்படும் நிலையில் உள்ளது.எனவும் இது போன்ற பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மடத்துக்குளம்| தவிர அருகில் உள்ள பல ஒன்றியங்கள் மற்றும் பல ஊர்களில் இருந்து திரளான அ.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர். நால்ரோட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து தேக்கம் அடைந்தது. மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. ஒரு மணி நேரத்துக்கு பின்பு ஆர்ப்பாட்டம் முடிந்த பின்பு இயல்பானது.


Related Tags :
Next Story