ஓ.பன்னீர்செல்வம் அணி தேர்தல் பணிமனை பேனரில் இடம்பெற்ற பிரதமர் நரேந்திரமோடி படம்


ஓ.பன்னீர்செல்வம் அணி தேர்தல் பணிமனை பேனரில் இடம்பெற்ற பிரதமர் நரேந்திரமோடி படம்
x

ஓ.பன்னீர்செல்வம் அணி தேர்தல் பணிமனை பேனரில் இடம்பெற்ற பிரதமர் நரேந்திரமோடி படம்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அ.தி.மு.க.வில் 2 அணிகள் சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதால் பா.ஜ.க.வின் ஆதரவு நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் ஈரோட்டில் உள்ள தேர்தல் பணிமனையில் அமைக்கப்பட்ட பேனர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பா.ஜ.க. தலைவர்கள் புகைப்படம் இடம்பெறவில்லை.

இந்தநிலையில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஈரோட்டில் நேற்று தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்ட பேனரில் ஒருபுறம் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் புகைப்படங்களும், மற்றொரு புறம் பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் புகைப்படங்களும் இடம்பெற்றன. மேலும் அ.தி.மு.க., பா.ஜ.க. கொடிகளும் பணிமனை வளாகத்தில் பறக்கவிடப்பட்டன. பா.ஜ.க.வின் தேர்தல் நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியின் தேர்தல் பணிமனையில் நரேந்திரமோடியின் படம் இடம்பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே நேற்று அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story