2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி குறித்து தலைமை தான் முடிவு செய்யும்; முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி குறித்து தலைமை தான் முடிவு செய்யும்; முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x

2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி குறித்து தலைமை தான் முடிவு செய்யும்; முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு

கடத்தூர்

கோபியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கோபி, அந்தியூர், பவானிசாகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள நகர, ஒன்றிய, பேரூர் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு விண்ணப்ப படிவங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய இருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் பிடிக்கும் என்ற நோக்கத்தில் இந்த உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஒரே நிலையாக நின்று பணிகளை நிறைவேற்றுவதால் தமிழ் மண்ணில் யாராலும் அ.தி.மு.க.வை அசைத்து விட முடியாது என்ற வரலாற்றை படைக்கப் போகின்றோம்.

2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியா அல்லது எந்தவிதமான கூட்டணி அமையும் என்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும். அதில் எந்த குழப்பமும் இல்லை. ஒரு தொகுதியில் குறைந்தது 75 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என்பது எங்கள் இலக்கு, குறைந்தது 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது கட்சியின் நிலை. அதற்காக நாங்கள் அயராமல் பாடுபடுவோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Next Story